Tamil Lyrics
Tamil Lyrics
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன்
அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்
நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்
உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னைக் காப்பவர் உறங்குவதில்லையே