lyrics

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர் – அண்டினோர் வாழ்வை
இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்

                                 எல்லோரும் பாடுங்கள்
                                கைத்தாளம் போடுங்கள்
                                சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்

1.எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
மீட்ட இயேசு அற்புதர் – என்னென்ன
தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும்
எங்கள் இயேசு பெரியவர் அற்புதர்
உண்மையாய் அவரை தேடும்
யாவருக்கும் இயேசு அற்புதர்

2.அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர் -அகோரக்
காற்றையும் அமைதிப் படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன்
எழுந்த இயேசு அற்புதரே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top